ஆரம்ப சுகாதாரநிலையங்களில் சித்த மருத்துவ டாக்டர்களை நியமிக்கவேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஆரம்ப சுகாதாரநிலையங்களில் சித்த மருத்துவ டாக்டர்களை நியமிக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சித்த மருத்துவ டாக்டர்கள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள டி.சுப்புலாபுரம் மற்றும் ராஜதானி ஆகிய கிராமங்களில் ஆரம்ப
ஆண்டிப்பட்டி
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஆரம்ப சுகாதாரநிலையங்களில் சித்த மருத்துவ டாக்டர்களை நியமிக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சித்த மருத்துவ டாக்டர்கள்தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள டி.சுப்புலாபுரம் மற்றும் ராஜதானி ஆகிய கிராமங்களில் ஆரம்ப சுகாதாரநிலையங்கள் உள்ளன. இங்கு சித்த மருத்துவ பிரிவு செயல்பட்டு வந்தது. இங்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து விதமான நோய்களுக்கும் மருந்துகள் வழங்கப்பட்டு வந்தன. இவையில்லாமல் ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவ டாக்டர்கள் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானவர்கள் சிகிச்சை பெற வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்க சித்த மருத்துவ பிரிவில் டாக்டர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சித்த மருத்துவ சிகிச்சை பெற வருபவர்களுக்கு மருந்துகள் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
நோயாளிகள் வருகை அதிகரிப்புஇந்த நிலையில் கடந்த சில தினங்களாக நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளதால், வாரத்தில் 2 நாட்கள் மட்டும் டி.சுப்புலாபுரம் சுகாதாரநிலையத்திற்கு தேவதானப்பட்டியில் இருந்தும், ராஜதானி சுகாதாரநிலையத்திற்கு ஆண்டிப்பட்டியில் இருந்தும் சித்த மருத்துவ பிரிவுக்கு டாக்டர்கள் வந்து செல்கின்றனர். மற்ற நாட்களில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
எனவே டி.சுப்புலாபுரம், ராஜதானி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவப்பிரிவுக்கு நிரந்தர டாக்டர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.