விடுமுறை நாளில் அலைமோதும் மக்கள் கூட்டம்: குளச்சல் கடற்கரையை சுற்றுலா தலமாக்கப்படுமா?
குளச்சல் கடற்கரையில் விடுமுறை நாட்களில் ஏராளமான பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே, இந்த கடற்கரையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சுற்றுலா தலமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குளச்சல் கடற்கரை குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கடற்
குளச்சல்
குளச்சல் கடற்கரையில் விடுமுறை நாட்களில் ஏராளமான பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே, இந்த கடற்கரையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சுற்றுலா தலமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளச்சல் கடற்கரைகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கடற்கரையில் குளச்சலும் ஒன்று. இது ஒரு இயற்கை துறைமுகம். தற்போது இங்கு மீன்பிடி துறைமுகம், துறைமுகம் பாலம், திருவாங்கூர் சமஸ்தான பேர் வெற்றித்தூண் போன்றவை அமைந்துள்ளன. குளச்சல் கடற்கரையில் உள்ள துறைமுகம் பாலத்தில் நின்று சூரியன் மறைவதை கண்டுகளிப்பது உள்ளத்தை கொள்ளை கொள்ளும் காட்சியாக உள்ளது.
குளச்சல் கடற்கரை அழகை ரசிக்க உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் குடும்பம் குடும்பமாக ஏராளமானோர் வருகிறார்கள்.
இவர்கள் துறைமுகம் பாலத்தில் நின்றபடி கடல் அழகையும், சூரியன் மறையும் காட்சியையும் ரசித்து கரையோரம் அமர்ந்து இளைப்பாறி செல்கிறார்கள். மேலும், போர் வெற்றித்தூணை பார்வையிட சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மண்டைக்காடு பகவதியம்மன் கோவில், குளச்சல் அக்கரைப்பள்ளி தர்கா போன்ற வழிபாட்டு தலங்களுக்கும் வரும் பக்தர்களும் குளச்சல் கடற்கரைக்கு வந்து செல்கிறார்கள்.
அடிப்படை வசதிகள் இல்லைஇவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் இந்த கடற்கரையில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் காணப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கு போதிய வசதி இல்லாததால் அலைதடுப்பு சுவரில் அமர்ந்து செல்கிறார்கள். இதனால், முதியோர்களும், சிறுவர்களும் பெரும் சிரமம் அடைகிறார்கள். எனவே, சுற்றுலா பயணிகள் நலன்கருதி குளச்சல் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து, சுற்றுலா தலமாக்க தரம் உயர்த்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.