வங்கியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


வங்கியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Dec 2016 3:45 AM IST (Updated: 28 Dec 2016 2:29 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அதிகபட்சமாக பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்த வங்கி நிர்வாகத்தை கண்டித்து ஆண்டிமடம் கடை வீதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, அனுசுயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயங்கொண்ட

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அதிகபட்சமாக பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்த வங்கி நிர்வாகத்தை கண்டித்து ஆண்டிமடம் கடை வீதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
 ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, அனுசுயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் மகாராஜன், தா.பழூர் ஒன்றிய செயலாளர் இளங்கோவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் நாகரத்தினம், இளவரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். வரிசையில் நீண்ட நேரம் காத்திருப்பது, அரசு அறிவித்த ஒரு நபருக்கு மாதம் ரூ. 24 ஆயிரம் கொடுக்க மறுக்கும் வங்கி மேலாளரை கண்டிப்பது, வாடிக்கையாளர்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும், கல்விக்கடன் கேட்டு மனு கொடுத்த மாணவ, மாணவிகளுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

Next Story