அரியலூரில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரியலூரில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Dec 2016 3:30 AM IST (Updated: 28 Dec 2016 2:29 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். துணை செயலாளர் தண்டபாணி முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் உலகநாதன் ஆர்ப்பாட

அரியலூர்

அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். துணை செயலாளர் தண்டபாணி முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் உலகநாதன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய பாதிப்பால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதிஉதவி வழங்க வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story