வி.கைகாட்டி பகுதிக்கு குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


வி.கைகாட்டி பகுதிக்கு குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 28 Dec 2016 4:00 AM IST (Updated: 28 Dec 2016 2:29 AM IST)
t-max-icont-min-icon

வி.கைகாட்டி பகுதிக்கு குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியல் அரியலூர் மாவட்டம் தேளூர் ஊராட்சிகுட்பட்ட வி.கைகாட்டி ஜங்ஷன் பகுதிக்கு கடந்த 1 வா

வி.கைகாட்டி

வி.கைகாட்டி பகுதிக்கு குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

அரியலூர் மாவட்டம் தேளூர் ஊராட்சிகுட்பட்ட வி.கைகாட்டி ஜங்ஷன் பகுதிக்கு கடந்த 1 வாரமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், ரெட்டிப்பாளையம் ஊராட்சி பகுதிக்கு சென்று பொதுமக்கள் குடிநீர் எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக ஊராட்சி செயலாளர் பாஸ்கரிடம் புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றும் இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திரண்டு வந்து, வி.கைகாட்டி பகுதிக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரி திருச்சி–சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பேச்சு வார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் முத்துகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் உமாசங்கர் மற்றும் கயர்லாபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story