சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது
சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. விழா கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. இதற்கு
கரூர்,
சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
விழாகரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
சிறுபான்மையின மாணவ– மாணவிகள் கல்வியில் வளர்ச்சி அடையவும், பொருளாதார மேம்பாடு அடையவும் பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதே போன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையினரின் குழந்தைகளும் கல்வி தரத்தில் சிறந்து விளங்க கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2015–16–ம் ஆண்டில் 6–ம் வகுப்பில் இருந்து 10–ம் வகுப்பு வரை பயிலும் 5 ஆயிரத்து 601 பேர், அதே போன்று 11–ம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் 583 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 184 மாணவ, மாணவிகளுக்கு சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
தையல் எந்திரங்கள்இதேபோன்று 2016–17–ம் கல்வியாண்டில் 7 ஆயிரத்து 570 பேர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ளனர். மேலும் 2015–16–ம் கல்வியாண்டில் 10, 12–ம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற 11 மாணவ– மாணவிகளுக்கு ரூ.32 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவிலும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 12 பயனாளிகளுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 900 வீதம் ரூ.58 ஆயிரம் மதிப்பில் தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
உதவித்தொகைபிற்படுத்தப்பட்டோருக்கென ஒதுக்கப்பட்ட 30 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம்களுக்கு என 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிட ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் உலமாக்களின் ஓய்வூதியத்தினை உயர்த்தியதோடு, கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம்கள் புனித தலங்களான ஜெருசலேம் மற்றும் மெக்கா ஆகிய நகர்களுக்கு புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. திருமண உதவி, விதவைகள் நிதியுதவி, கல்வி உதவித்தொகை, தொழில் தொடங்க கடனுதவி, கண் கண்ணாடி, ஈமச்சடங்கு உதவித்தொகை மற்றும் இயற்கை மரண உதவித்தொகை என 97 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 250 மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், திட்ட இயக்குனர் கோமகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.