அரிமளம் ஒன்றிய பகுதியில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகியது விவசாயிகள் வேதனை
அரிமளம் ஒன்றிய பகுதியில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 4812 ஏக்கர் அரிமளம் ஒன்றியத்தில் 12814 ஏக்கர் அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சுமார் 8002 ஏக்கர் அளவில் நேரடி நெல் விதைப்பு மழையை மட்டுமே நம்பி செ
அரிமளம்
அரிமளம் ஒன்றிய பகுதியில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
4812 ஏக்கர்அரிமளம் ஒன்றியத்தில் 12814 ஏக்கர் அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சுமார் 8002 ஏக்கர் அளவில் நேரடி நெல் விதைப்பு மழையை மட்டுமே நம்பி செய்யப்பட்டுள்ளது. 4812 ஏக்கர் அளவில் நடவு பயிர் கண்மாய் தண்ணீரை நம்பியும், கிணற்று மோட்டார் பாசனத்தை நம்பியும் செய்யப்பட்டுள்ளது. பருவ காலத்தில் பெய்ய வேண்டிய மழை பெய்யாமல் பொய்த்து போனதால் அரிமளம் ஒன்றியத்தில் கீழாநிலைகோட்டை சரகம், செங்கீரை சரகம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி காய்ந்து வருகிறது. ஏம்பல் சரகத்தில் நெற்பயிர்கள் கருகி விட்டன. இதனால் உணவுக்காக பயிர் செய்யப்பட்ட நெல் கதிர்களை மாடுகளை விட்டு விவசாயிகள் மேய்த்து விடும் அவலம் ஏற்பட்டுள்ளது.
விழிப்புணர்வுசில இடங்களில் அவ்வப்போது சிறிதாக பெய்த மழையால் இதுவரை பயிர்கள் தப்பித்து வந்தன. தற்போது அந்த பயிர்களும் காய்ந்து வருகிறது. இவ்வாறு காய்ந்து வரும் பயிர்கள் மீது பொட்டாசியம்குளோரைடு மற்றும் பிபிஎப்எம் கரைச்சல் ஆகியவற்றை தனி தனியாக நெல்பயிர்கள் மீது தெளித்தால் 10 நாட்கள் வரை காயாமல் தடுக்க முடியும் என கூறும் வேளாண்மை அதிகாரிகள் இவற்றை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர். வரும் காலங்களில் குறைந்த தண்ணீர் தேவைப்படும் மக்காசோளம், உழுந்து போன்ற தானியபயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊக்குவித்து வருகின்றனர்.
வேண்டுகோள்புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை பொய்துபோனதால் வேளாண்மைதுறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி எல்லா விவசாயிகளையும் காப்பீடு செய்ய வற்புறுத்தியதின் பலனாக கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பயிர் காப்பீடு அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது. தற்போது விவசாயம் பொய்த்து போனதால் மாவட்ட கலெக்டர் மற்றும் வேளாண்மைதுறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு பெற்று தர வேண்டும் என அரிமளம் ஒன்றிய விவசாயிகள் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.
வேதனைபயிர் கருகி வருவதால் வேதனை அடைந்த விவசாயி பழனியப்பன் கூறுகையில் இந்த ஆண்டு பயிர் இழப்பீடு கிடைத்தால் தான் விவசாயத்திற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தி நிம்மதியாக இருக்கமுடியும் எனவும் இல்லைஎனில் விவசாயம் செய்வதையே தவிர்த்து விட்டு வேறு வேலைக்கு தான் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.