நெல்லித்தோப்பு சிக்னல் அருகே மரக்கிளையில் லாரி மோதியதால் போக்குவரத்து பாதிப்பு


நெல்லித்தோப்பு சிக்னல் அருகே மரக்கிளையில் லாரி மோதியதால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 28 Dec 2016 3:37 AM IST (Updated: 28 Dec 2016 3:37 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்திலிருந்து நேற்று கன்டெய்னர் லாரி ஒன்று புதுச்சேரி நோக்கி வந்தது. அந்த லாரி நெல்லித்தோப்பு சிக்னல் அருகே வந்தபோது லாரியின் குறுக்கே மொபட்டில் பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் மீது மோதாமல் இருக்க லாரியை அதன் டிரைவர் திருப்பியுள்ளார். இதில் லாரி சாலையோரம் உள்ள மரக்கிளை ஒன்றில் மோதியது. லாரி மோதிய வேகத்தில் மரக்கிளை முறிந்து ரோட்டில் தொங்கியது இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போ

புதுச்சேரி,

விழுப்புரத்திலிருந்து நேற்று கன்டெய்னர் லாரி ஒன்று புதுச்சேரி நோக்கி வந்தது. அந்த லாரி நெல்லித்தோப்பு சிக்னல் அருகே வந்தபோது லாரியின் குறுக்கே மொபட்டில் பெண் ஒருவர் வந்துள்ளார்.

அவர் மீது மோதாமல் இருக்க லாரியை அதன் டிரைவர் திருப்பியுள்ளார். இதில் லாரி சாலையோரம் உள்ள மரக்கிளை ஒன்றில் மோதியது. லாரி மோதிய வேகத்தில் மரக்கிளை முறிந்து ரோட்டில் தொங்கியது

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் புதுவை போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர்செய்யும் நடவடிக்கையில் இறங்கினார்கள்.

முறிந்து தொங்கிய மரக்கிளை உடனடியாக வெட்டி அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து போக்கு வரத்தும் சீரானது. 

Next Story