விலைக்கு வாங்குவதுபோல நடித்து விலை உயர்ந்த செல்போனை பறித்துச்சென்ற என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் கைது
விலை உயர்ந்த செல்போனை விலைக்கு வாங்குவதுபோல நடித்து பறித்துச்சென்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். செல்போன் விற்பனைக்கு சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 31). இவருடைய விலை உயர்ந்த செல்போன் ஒன்றை ரூ.40 ஆய
செங்குன்றம்,
விலை உயர்ந்த செல்போனை விலைக்கு வாங்குவதுபோல நடித்து பறித்துச்சென்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
செல்போன் விற்பனைக்குசென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 31). இவருடைய விலை உயர்ந்த செல்போன் ஒன்றை ரூ.40 ஆயிரத்துக்கு விற்கப்போவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார். இதையடுத்து ரஞ்சித்குமாரை தொடர்புகொண்ட 2 பேர் செல்போனை தாங்கள் வாங்கிக்கொள்வதாக கூறி அவரை மாதவரம் மேம்பாலம் அருகே நிற்கும்படி கூறினர்.
அதை நம்பி ரஞ்சித்குமாரும் செல்போனுடன் அந்த இடத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்து ரஞ்சித்குமாரிடம் செல்போனை வாங்கி பார்ப்பதுபோல் நடித்து செல்போனுடன் தப்பிச்சென்றனர்.
என்ஜினீயரிங் மாணவர்கள்இதுகுறித்து ரஞ்சித்குமார் மாதவரம் போலீசில் புகார் செய்தார். உடனடியாக மாதவரம் போலீசார் அந்த வாலிபர்களை மூலக்கடை அருகே சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் தண்டையார்பேட்டை, நியூ வைத்தியநாதன் தெருவை சேர்ந்த பிரெட்ரிக் (20), எண்ணூர் நெட்டுக்குப்பத்தை சேர்ந்த மோத்தீஸ்வரன்(21) என்பதும், என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
மடிக்கணினி, செல்போன்கள் திருட்டு
* சென்னை நேரு விளையாட்டு அரங்கில் உள்ள விடுதியில் 2 மடிக்கணினிகள், 3 செல்போன்கள், ஒரு கேமரா மற்றும் ரூ.36 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
* கிண்டி, வேளச்சேரி பகுதிகளில் வழிப்பறி உள்பட பல வழக்குகளில் தொடர்புடைய பிரவீனாபானு (24), ஆனந்தபாபு (24), கேரல் (24), தினேஷ் (25), கதிர்வேல் என்ற கதிரவன் (27) ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார், 5 பவுன் நகைகள், ரூ.1 லட்சம், ஒரு கார் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
* அம்பத்தூர் பானுநகரில் சிவக்குமார் (31) என்பவரை சுதாகர் (31), ரமேஷ் ஆகியோர் கல்லால் தாக்கினர். அப்போது சிவக்குமாரின் தம்பி பப்லு (26) சுதாகரை கத்தியால் குத்தினார். இதுதொடர்பாக பப்லு, ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
* தமிழ்நாடு காவல்துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்திற்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் மாநில தலைவராக மனோகரனும், துணைத்தலைவர்களாக சரவணன், சத்யேந்திரன் ஆகியோரும், பொருளாளராக செந்தில்குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
* பாடி எம்.டி.எச். சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்ற தமிழ்ச்செல்வன் (47) எதிரே வந்த மணி என்கிற ஜெபமணி என்பவரது மோட்டார்சைக்கிள் மோதியதில் உயிரிழந்தார். இதுதொடர்பாக மணியை போலீசார் கைது செய்தனர்.