புதுவை மாநிலம் பனித்திட்டு பகுதியில் ரூ.70 கோடி செலவில் மீன்பிடி துறைமுகம் அமைச்சர் கந்தசாமி தகவல்
புதுச்சேரி மாநிலம் பனித்திட்டு கிராமப் பகுதியில் ரூ.70 கோடி செலவில் மீன்பிடி துறைமுகம் விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார். பனித்திட்டு கிராமத்தில் ஆய்வு புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பனித்திட்டு மீனவ கிராமத்தில் மீன்ப
பாகூர்,
புதுச்சேரி மாநிலம் பனித்திட்டு கிராமப் பகுதியில் ரூ.70 கோடி செலவில் மீன்பிடி துறைமுகம் விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.
பனித்திட்டு கிராமத்தில் ஆய்வுபுதுச்சேரி மாநிலம் ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பனித்திட்டு மீனவ கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக நேற்று அமைச்சர் கந்தசாமி தலைமையில் பனித்திட்டு கடற்கரை மற்றும் ஆற்றின் முகத்துவார பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் அனந்தராமன் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர், புதுச்சேரி துறைமுக இயக்குனர் சாமிநாதன், செயற்பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் பங்கேற்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வைத் தொடர்ந்து பனித்திட்டு, நல்லவாடு, நரம்பை, புதுக்குப்பம் மீனவ பஞ்சாயத்தார் மற்றும் மீனவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ரூ.70 கோடி செலவில் மீன்பிடி துறைமுகம்ஆய்வுக்கூட்டம் முடிந்த பின்னர் அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–
பனித்திட்டு பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க ஏற்ற சூழ்நிலை இருக்கிறது. இதனால் இந்த பகுதி மக்களின் வாழ்க்கை தரம் உயரும். மேலும் மீனவ கிராமத்தினரும், இந்த துறைமுகம் அமைக்க ஆதரவும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர். இந்த துறைமுகம் ரூ.70 கோடி செலவில் அமைக்கப்படும். அதற்காக நிதி தேவைப்படுகிறது.
அதற்கான கோப்புகள் தயார் செய்யப்பட்டு மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், முதல்–அமைச்சர் நாராயணசாமி ஆகியோருடன் ஆலோசனை செய்யப்பட்டு மத்திய அரசிடம் அனுமதி பெறப்படும். விரைவில் துறைமுகம் அமைக்கும் பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கந்தசாமி கூறினார்.