தாயுடன் தப்பிய குட்டி குரங்கு மீண்டும் பூங்காவிற்குள் வந்தது


தாயுடன் தப்பிய குட்டி குரங்கு மீண்டும் பூங்காவிற்குள் வந்தது
x
தினத்தந்தி 28 Dec 2016 4:04 AM IST (Updated: 28 Dec 2016 4:04 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா பூங்கா இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– கடந்த 12–ந்தேதி வார்தா புயல் வீசியபோது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, ஓநாய், ஒட்டகச

வண்டலூர்,

சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா பூங்கா இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

கடந்த 12–ந்தேதி வார்தா புயல் வீசியபோது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, ஓநாய், ஒட்டகச்சிவிங்கி, மனிதக்குரங்கு, வரிக்குதிரை போன்ற அனைத்து விலங்குகளும் பூங்கா பணியாளர்களால் மீட்கப்பட்டு இரவு அடைப்பிடங்களில் பாதுகாப்பாக அடைக்கப்பட்டன.

2 நீலகிரி கருங்குரங்குகள் மட்டும் பூங்காவில் இருந்து வெளியேறி மக்கள் வசிப்பிடங்களில் சுற்றிக் கொண்டிருந்தன. இதில் ஒரு கருங்குரங்கு நேற்று முன்தினம் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடித்து வரப்பட்டது. மற்றொரு குட்டி கருங்குரங்கு தானாகவே மீண்டும் பூங்காவிற்குள் நேற்று திரும்பிவிட்டது. தற்போது பூங்காவிற்குள் சுற்றித்திரியும் குட்டி குரங்கை பிடிப்பதற்கு பூங்கா பணியாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story