திருவள்ளூர் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து பஸ் டிரைவர் தற்கொலை
திருவள்ளூரை அடுத்த ஈக்காடுகண்டிகையை சேர்ந்தவர் லோகராஜ் (வயது 54). திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். மது அருந்தும் பழக்கம் உடையவர். கடந்த 6 மாத காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்ற
திருவள்ளூரை அடுதத ஈக்காடுகண்டிகையை சேர்ந்தவர் லோகராஜ் (வயது 54). திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். மது அருந்தும் பழக்கம் உடையவர். கடந்த 6 மாத காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் வயிற்று வலி அதிகமானதால் அவர் மதுவில் விஷம் கலந்து குடித்தார். மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story