நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை: கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்திய 488 விவசாயிகள் கைது
நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்திய 488 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை,

காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் நேற்று காலையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கினார்கள்.
கோரிக்கைகள்
நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், தண்ணீர் இல்லாமல் கருகிய நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், கருகிய கரும்பு பயிருக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம், மானாவாரி பயிர்களுக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகள் மீதான ஜப்தி நடவடிக்கைகளை தடுக்க வேண்டும், ஏரி, குளங்களை தூர்வார சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும், கால்நடைகளுக்கு தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்.
100 நாள் வேலைதிட்டம்
100 நாட்கள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி வேலை வழங்குவதுடன், அவர்களுக்கான கூலியை ரூ.400–ஆக உயர்த்தி வழங்க வேண்டும், விவசாய தொழிலாளர் குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வேலுமயில், விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பால்சாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மோகன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
488 பேர் கைது
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டார்கள்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 271 பெண்கள் உள்பட 488 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story