வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டம் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது


வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டம் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
x
தினத்தந்தி 29 Dec 2016 4:30 AM IST (Updated: 28 Dec 2016 6:18 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காத்திருக்கும் போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருக்கும் போராட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. லதா, விவசாயிகள் சங்க தலைவர் தயாநிதி ஆகியோர் தலைமை தாங்கினர்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் அருள்சீனிவாசன், பொருளாளர் பிச்சாண்டி, இணை செயலாளர் நெடுஞ்செழியன், துணைத்தலைவர் விஜயன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

வறட்சி பாதித்த மாநிலமாக

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும், தற்கொலை மற்றும் அதிர்ச்சியில் மரணம் அடைந்த விவசாயிகள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

பாலாற்றில் நீர்வரத்தை உறுதி செய்ய வேண்டும், மணல் குவாரி, கல்குவாரி, தோல் கழிவுநீர், வன விலங்குகளிடம் இருந்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி, மானியவிலையில் தீவனம் வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு 2 ஆண்டுகளாக ஆலைகள் வழங்காமல் உள்ள பாக்கித் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story