சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
மானாமதுரை அருகே உள்ள உடைகுளத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 32). இவர் கடந்த 27–2–2015 அன்று வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மானாமதுரை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி கண்ணனை கைது செய்தனர்
சிவகங்கை,
மானாமதுரை அருகே உள்ள உடைகுளத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 32). இவர் கடந்த 27–2–2015 அன்று வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மானாமதுரை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி கண்ணனை கைது செய்தனர். மேலும் அவர் மீது சிவகங்கை அனைத்து மகளிர் விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜெயராஜ், குற்றம் சாட்டப்பட்ட கண்ணனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.
Next Story