அடிப்படை வசதியில்லாத மேல கோதை நாச்சியார்புரம் கிராமம் கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வெம்பக்கோட்டை அருகிலுள்ள மேல கோதை நாச்சியார்புரம் கிராமத்துக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்று கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கலெக்டருக்கு மனு வெம்பக்கோட்டை தாலுகா விஜயரெங்காபுரம் ஊராட்சியை சேர்ந்த மேல கோதை நாச்சியார்புரம் கிராமத்தில்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகிலுள்ள மேல கோதை நாச்சியார்புரம் கிராமத்துக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்று கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டருக்கு மனு
வெம்பக்கோட்டை தாலுகா விஜயரெங்காபுரம் ஊராட்சியை சேர்ந்த மேல கோதை நாச்சியார்புரம் கிராமத்தில் 150–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தினர் அடிப்படை வசதி கேட்டு கலெக்டர் சிவஞானத்துக்கு மனு அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது;– எங்கள் கிராமத்தில் கழிவுநீர் செல்ல வாறுகால் அமைத்து 10 வருடங்களுக்கு மேலாகி விட்ட நிலையில் பராமரிக்கப்படாததால் சிதைந்து போய் விட்டது. தரமற்ற முறையில் சிமெண்டு ரோடு போடப்பட்டதால் இப்போது குண்டும் குழியுமாக சிமெண்டு ரோடு போட்டதற்கான அடையாளமே இல்லாமல் காட்சி தருகிறது.அலங்கார கற்கள் பதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
குடிநீருக்கான கிணற்றினை தூர்வாராததால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பாறை கிடங்கு ஊருணி நிலத்தடி நீர்மட்டம் உயர உறுதுணையாக இருந்து வந்தது. ஆனால் தற்போது கழிவுநீர் தேங்கும் இடமாக ஊருணி மாறியுள்ளது. வாறுகால் வசதி செய்து ஊருணியை பாதுகாக்க வேண்டும். தெருவிளக்குகளும் எரியவில்லை. பெரும்பாலான இடங்கள் இருளில் மூழ்கிக்கிடக்கின்றன.
பன்றி தொல்லைஅங்கன்வாடி மையம் பழுதுபார்க்கப்படாமல் ஆபத்தான கட்டிடத்தில் இயங்குகிறது. அதன் அருகே குப்பை கொட்டப்படுவதால் பன்றிகளின் கூடாரமாக உள்ளது. பன்றி வளர்க்க தடை விதிக்கப்பட்ட நிலையில் சிலர் இதனை மீறி பன்றிகளை வளர்த்து வருகின்றனர்.
கிராம மக்கள் விவசாயத்தையே நம்பி உள்ள நிலையில் கோட்டை கண்மாயை புனரமைத்தால் நீர் தேங்கிட வழிபிறக்கும். இதனால் வேலை வாய்ப்பும் பெருகும். எனவே புறக்கணிக்கப்பட்ட கிராமமாக இருக்கும் மேல கோதை நாச்சியார் புரத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
இந்த ஊராட்சியில் துரைச்சாமிபுரம், மீனாட்சிபுரம், கீழ கோதை நாச்சியார்புரம் ஆகிய கிராமங்களும் உள்ளன. ஆனால் மக்கள் தொகை அதிகம் கொண்ட துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர்களே உள்ளாட்சி தலைவர் பதவிக்கு வருவதால் எங்கள் கிராமம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. எனவே எங்களது கோரிக்கைகளை தற்போது தனிக்கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.