வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டத்தில் நிவாரணம் வழங்கப்படும் கலெக்டர் தகவல்
நெல்லை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டத்தில் நிவாரணம் வழங்கப்படும் என கலெக்டர் கருணாகரன் தெரிவித்தார். செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு நெல்லை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் வேளாண்துறை சார்ந்த தோட்டக்கலை துறை, வேளாண
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டத்தில் நிவாரணம் வழங்கப்படும் என கலெக்டர் கருணாகரன் தெரிவித்தார்.
செய்தியாளர்களுடன் சென்று ஆய்வுநெல்லை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் வேளாண்துறை சார்ந்த தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை பொறியியல் துறை வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் கருணாகரன், செய்தியாளர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மானூரை அடுத்த அழகிய பாண்டியபுரம், பனவடலிசத்திரம், குருக்கள்பட்டி சங்கரன்கோவில் ஆகிய இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கலெக்டர் கருணாகரன் கூறியதாவது:–
மானியம்வேளாண்மைத்துறையின் மூலம் நெல்பயிர் இயந்திர நடவு செய்திட ஹெக்டேருக்கு ரூ.5000 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. மானூர் தாலுகாவில் 250 ஹெக்டேரும், மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் ஹெக்டேர் இயந்திர நடவிற்கு மானியம் வழங்கப்பட உள்ளது. மேலும் பண்ணை குட்டை அமைத்தல். ஆடுகள், நாட்டுக்கோழி வளர்த்தல், மண்புழு உரக்கூடம் அமைத்தல் ஆகிய ஒருங்கிணைந்த பண்ணைத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியமாக ரூ.55 ஆயிரம் வழங்கப்படுகிறது.
தோட்டக்கலைத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை ஆய்வு செய்தேன். வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் நபார்டு திட்டத்தில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடங்கள் சங்கரன்கோவில், குருவிகுளம், தென்காசி, அம்பை ஆகிய ஊர்களில் கட்டப்பட்டு வருகின்றன.
39 ஆயிரம் விவசாயிகள்நெல்லை மாவட்டத்தில் பாரத பிரதமர் பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் இதுவரை 39 ஆயிரம் விவசாயிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் காப்பீட்டு திட்டத்தின் மூலம் நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். நமது அணைகளில் உள்ள நீர் இருப்பின் மூலம் இன்னும் 40 நாட்களுக்கு குடிநீர் வழங்கிட முடியும். மழையை பொறுத்து மாற்று நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கலெக்டர் கருணாகரன் கூறினார்.
ஆய்வின் போது, வேளாண்மை இணை இயக்குனர் கனகராஜ், தோட்டக்கலை துணை இயக்குனர் கண்ணன், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ரங்கராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.