கிருஷ்ணகிரியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவில் கையெழுத்து இயக்கம் போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


கிருஷ்ணகிரியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவில் கையெழுத்து இயக்கம் போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 29 Dec 2016 4:00 AM IST (Updated: 28 Dec 2016 7:57 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது. இதையொட்டி சாலை விதிகளை மதித்து வாகனத்தை இயக்குவோம் என வலியுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதை கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ம

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரில் மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது. இதையொட்டி சாலை விதிகளை மதித்து வாகனத்தை இயக்குவோம் என வலியுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதை கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்குமார் (டவுன்), அன்புமணி (தாலுகா) ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முதல் கையெழுத்து இட்டு, போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் கூறியதாவது:–

சாலை விதிகளை மீறுபவர்களால்தான் விபத்து அதிகம் நடக்கிறது. சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்காக, போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது, மதுபோதையில் ஓட்டுவது உள்ளிட்ட காரணங்களால் விபத்துகள் நடக்கிறது. போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியையொட்டி சாலை பாதுகாப்பு குறித்த துண்டுபிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள், பஸ் டிரைவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாலை விதிகளை கடைபிடிப்போம் என்று கையெழுத்திட்டு சென்றனர்.


Next Story