கிருஷ்ணகிரியில் ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது


கிருஷ்ணகிரியில் ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 29 Dec 2016 4:30 AM IST (Updated: 28 Dec 2016 7:58 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. குறை தீர்க்கும் நாள் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது.

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். இதில் கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட 59 மனுக்களில் 48 மனுக்களின் மீது தீர்வு காணப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள 11 மனுக்களின் மீது துறை தலைவர்களிடம் அறிக்கை பெறப்பட்டது.

தொடர்ந்து நேற்று நடந்த கூட்டத்தில் 13 மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார். பெறப்பட்ட மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரைவில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார்.

காசோலைகள்

நேற்றைய கூட்டத்தில் குடும்ப ஓய்வூதியதாரர்களில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் 9 பேரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம், ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ நிதி 13 காசோலைகள் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்து 748 தொகையை கலெக்டர் கதிரவன் ஓய்வூதியதாரர்களின் குடும்பத்திற்கு வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்டி, சென்னை ஓய்வூதிய இணை இயக்குனர் ராமச்சந்திரன், துணை இயக்குனர் மதிவாணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சாந்தி, முகமது பாரூக் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story