விதிமுறைகளை மீறி ரெயில்களில் பயணம் செய்த 40 பேருக்கு அபராதம்


விதிமுறைகளை மீறி ரெயில்களில் பயணம் செய்த 40 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 29 Dec 2016 3:45 AM IST (Updated: 28 Dec 2016 8:09 PM IST)
t-max-icont-min-icon

சேலம் வழியாக செல்லும் ரெயில்களில பயணச்சீட்டு வாங்காமல் ரெயிலில் பயணிகள் செல்வதாகவும், முன்பதிவு அல்லாத பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு முன்பதிவு செய்யப்பட்ட ரெயில் பெட்டிகளில் பயணிகள் பயணம் செய்து வருவதாகவும் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மாவிற்கு

சூரமங்கலம்,

சேலம் வழியாக செல்லும் ரெயில்களில பயணச்சீட்டு வாங்காமல் ரெயிலில் பயணிகள் செல்வதாகவும், முன்பதிவு அல்லாத பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு முன்பதிவு செய்யப்பட்ட ரெயில் பெட்டிகளில் பயணிகள் பயணம் செய்து வருவதாகவும் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மாவிற்கு புகார்கள் வந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் சேலம் வழியாக சென்ற ஆழப்புலா–தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சேலம் ரெயில்வே கோட்ட வணிக உதவி மேலாளர் ஷாஜகான் தலைமையில் டிக்கெட் பரிசோதகர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது, பயணச்சீட்டு வாங்காமல் ரெயிலில் பயணம் செய்தவர்கள், முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தவர்கள் என மொத்தம் 40 பேர் பிடிபட்டனர். இதையடுத்து விதிமுறைகளை மீறி ரெயிலில் பயணம் செய்த 40 பேருக்கு ரூ.10 ஆயிரத்து 400 அபராதம் விதித்து உடனடியாக வசூலிக்கப்பட்டது. இதேபோல், சேலம் வழியாக செல்லும் முக்கிய ரெயில்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.


Next Story