ஓமலூர் அருகே விபத்து: தி.மு.க. துணைச்செயலாளர் பலி சரக்கு ஆட்டோ மீது கார் மோதியது


ஓமலூர் அருகே விபத்து: தி.மு.க. துணைச்செயலாளர் பலி சரக்கு ஆட்டோ மீது கார் மோதியது
x
தினத்தந்தி 29 Dec 2016 5:00 AM IST (Updated: 28 Dec 2016 8:11 PM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே சரக்கு ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் காடையாம்பட்டி பேரூர் தி.மு.க. துணைச்செயலாளர் பலியானார். தி.மு.க. துணைச்செயலாளர் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 45). இவர் காடையாம்பட்டி

ஓமலூர்,

ஓமலூர் அருகே சரக்கு ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் காடையாம்பட்டி பேரூர் தி.மு.க. துணைச்செயலாளர் பலியானார்.

தி.மு.க. துணைச்செயலாளர்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 45). இவர் காடையாம்பட்டி பேரூர் தி.மு.க. துணைச்செயலாளராக இருந்தார். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு மாலதி என்ற திருமணமான மகளும், தீபக் என்ற என்ஜினீயரிங் படிக்கும் மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் சின்னதுரை தனது சரக்கு ஆட்டோ மூலம் கடைகளுக்கு பாக்கெட் பால் வினியோகம் செய்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல தீவட்டிப்பட்டி அருகே உள்ள மூக்கனூரில் பால் வினியோகம் செய்து விட்டு சரக்கு ஆட்டோவில் பூசாரிப்பட்டி நோக்கி சென்றார். வழியில் தாசசமுத்திரம் அருகே தர்மபுரி–சேலம் தேசிய நெடுஞ்சாலையை அவர் கடக்க முயன்றார்.

கார் மோதி பலி

அப்போது தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் திடீரென சரக்கு ஆட்டோ மீது மோதியது. உடனே சின்னதுரை ஆட்டோவில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பிக்க முயன்றார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவர் மீது சரக்கு ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் சின்னதுரை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், பலியான சின்னதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story