கோவை போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு போலி ஆவணம் தயாரித்து வழக்கை முடித்ததால் கோர்ட்டு நடவடிக்கை


கோவை போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு போலி ஆவணம் தயாரித்து வழக்கை முடித்ததால் கோர்ட்டு நடவடிக்கை
x
தினத்தந்தி 29 Dec 2016 1:00 AM IST (Updated: 28 Dec 2016 8:51 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வலசக்காரன்விளை மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. அவருடைய மகன் தனபால். இவர் மத்திய ரிசர்வ் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். கடந்த 2008–ம் ஆண்டு நிலமோசடி தொடர்பாக சாயர்புரம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வலசக்காரன்விளை மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. அவருடைய மகன் தனபால். இவர் மத்திய ரிசர்வ் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். கடந்த 2008–ம் ஆண்டு நிலமோசடி தொடர்பாக சாயர்புரம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து முத்து, பாலு ஆகிய 2 போலீஸ்காரர்கள், தனபால் வீட்டுக்கு சென்று மிரட்டி பணம், நகையை எடுத்து சென்றார்களாம். இது தொடர்பாக கோர்ட்டு உத்தரவின் பேரில் ஏரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக பல ஆண்டுகளாக தனபாலுக்கு கோர்ட்டில் இருந்தோ, போலீஸ் நிலையத்தில் இருந்தோ எந்தவித தகவலும் வரவில்லை. இதனால் அந்த வழக்கில் போலீசார் சமர்ப்பித்த இறுதி அறிக்கை மற்றும் அதன் மீது போடப்பட்ட உத்தரவு நகல் கேட்டு மனு செய்தார்.

அப்போது, தனபாலின் கையெழுத்தை, அப்போதைய ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கிருஷ்ணன் போலியாக போட்டு ஒரு ஆவணம் தயாரித்து கோர்ட்டில் தாக்கல் செய்து இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில், போலீசின் இறுதி அறிக்கையை கோர்ட்டு ஏற்றுக்கொள்வதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று கூறப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் வழக்கு முடித்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலி ஆவணம் தாக்கல் செய்து, வழக்கை முடித்த இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, சம்மந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், அப்போதைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தற்போது கிருஷ்ணன் கோவை மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

Next Story