கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் உண்டியல்கள் திறப்பு; ரூ.3.73 லட்சம் காணிக்கை
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் மற்றும் உபகோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில், காணிக்கை ரூ.3.73லட்சம் இருந்தது.
கோவில்பட்டி,

உண்டியல்கள் திறப்பு
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில், ஒரு மாதத்துக்கு பிறகு நேற்று முன்தினம் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கன்னியாகுமரி இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
கோவில் நிர்வாக அதிகாரி (பொறுப்பு) ராமசுப்பிரமணியன், கோவில் ஆய்வாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் தலைமை எழுத்தர் ராமலிங்கம் மற்றும் விசுவகர்ம உயர்நிலைப் பள்ளிக்கூட மாணவர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
ரூ.3½ லட்சம் காணிக்கை
செண்பகவல்லி அம்மன் கோவிலில் 16 உண்டியல்களும், சுந்தரராஜ பெருமாள் கோவில், தெப்பக்குளம் விநாயகர் கோவில், மார்க்கெட் ரோடு முருகன் கோவில் ஆகியவற்றில் தலா ஒரு உண்டியல் வீதம் மொத்தம் 19 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இவற்றில் மொத்தம் ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 583–யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
திருப்பணி உண்டியலில் ரூ.1 லட்சத்து 57 ஆயிரத்து 504–யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது. ஒரு மாதத்தில் பக்தர்கள் மொத்தம் ரூ.3 லட்சத்து 73 ஆயிரத்து 87–யை காணிக்கையாக இருந்தது.

Next Story