8–ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்


8–ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்
x
தினத்தந்தி 29 Dec 2016 1:00 AM IST (Updated: 28 Dec 2016 9:14 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில், 8–ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம், என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தனித்தேர்வர்கள்

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில், 8–ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம், என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தனித்தேர்வர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில், 8–ம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற 04–01–17 அன்று தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, சேவை மையங்கள் மூலம் 8–ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுக்கூட நுழைவு அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது.

நுழைவுச்சீட்டு

ஆகையால் விண்ணப்பதாரர்கள்  இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டு இன்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து தேர்வர்களுக்கும் தேர்வுக்கூட நுழைவு அனுமதி சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்பப்படாது, என அவர் தெரிவித்துள்ளார்.


Next Story