திருப்புவனம் பகுதியில் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் சிக்கினர்
மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்த சதீஸ்குமார், தனது மனைவி தீபிகாவுடன் கடந்த அக்டோபர் மாதம் திருப்புவனம் வந்து, சாமி கும்பிட்டுவிட்டு மதுரைக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தார். அப்போது திருப்புவனம் மேல்புறம் மதுரை–மண்டபம் நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் மோட
திருப்புவனம்,
மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்த சதீஸ்குமார், தனது மனைவி தீபிகாவுடன் கடந்த அக்டோபர் மாதம் திருப்புவனம் வந்து, சாமி கும்பிட்டுவிட்டு மதுரைக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தார். அப்போது திருப்புவனம் மேல்புறம் மதுரை–மண்டபம் நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தீபிகா அணிந்திருந்த 1 பவுன் நகையை பறித்து சென்றனர். இதேபோல் திருப்புவனம் பழையூரை சேர்ந்தவர் அழகேசன், தனது மனைவி கண்ணகியுடன் கடந்த அக்டோபர் மாதம் திருப்புவனம் வந்துவிட்டு, வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது இவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், கண்ணகி அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து சென்றனர். இந்த 2 நகைபறிப்பு சம்பவங்கள் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று திருப்புவனம் சந்தைதிடல் அருகே உள்ள சோதனை சாவடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரம் மாணிக்கம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகம் அளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளிக்கவே, தொடர்ந்து நடத்திய விசாரணையில் 2 பேரும் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்த கற்பூர சுந்தரபாண்டியன்(23), ராஜேஷ்(22) என்பதும், இவர்கள் தான் தீபிகா, கண்ணகி ஆகியோரிடம் நகைபறித்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், நகைகளை மீட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு செல்போன், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்யப்பட்டது.