விழுப்புரம் சபரிகிரீசன் கோவிலில் மண்டல பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


விழுப்புரம் சபரிகிரீசன் கோவிலில் மண்டல பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 29 Dec 2016 4:15 AM IST (Updated: 28 Dec 2016 11:04 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கத்தில் உள்ள சபரிகிரீசன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மண்டல பூஜை விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிகிரீசன் கோவில் உள்ளது. இந்த கோவில

விழுப்புரம்,

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கத்தில் உள்ள சபரிகிரீசன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மண்டல பூஜை

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிகிரீசன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மண்டல பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதையொட்டி காலை 7 மணிக்கு சாமிக்கு பால், தயிர், நெய், பன்னீர், தேன், சந்தனம், விபூதி ஆகியவற்றினால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 11 மணியளவில் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு ராஜ அலங்காரத்தில் சபரிகிரீசன் அருள்பாலித்தார். பின்னர் மகா தீபாராதனை நடந்தது.

பக்தர்கள் சாமி தரிசனம்

அதனை தொடர்ந்து பகல் 12 மணியளவில் சபரிகிரீசன் அய்யப்ப பக்தர்கள் குழு சார்பில் குருசாமி செல்வம் தலைமையில் பஜனை பாடல்கள் பாடப்பட்டு 18 படி பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் அய்யப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.


Next Story