கருகிய பயிர்களை பார்த்து மனமுடைந்தார்: வயலில் மயங்கி விழுந்து விவசாயி சாவு வாய்மேட்டில் பரிதாபம்
வாய்மேட்டில் கருகிய பயிர்களை பார்த்து மனமுடைந்து வயலில் மயங்கி விழுந்து விவசாயி உயிரிழந்தார். சம்பா சாகுபடி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தான் விவசாயம் மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கிறது. மேலும், மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீ
வாய்மேடு,
வாய்மேட்டில் கருகிய பயிர்களை பார்த்து மனமுடைந்து வயலில் மயங்கி விழுந்து விவசாயி உயிரிழந்தார்.
சம்பா சாகுபடிதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தான் விவசாயம் மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கிறது. மேலும், மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை நம்பி விவசாயிகள் குறுவை, சம்பா சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து குறிப்பிட்ட காலத்துக்குள் தண்ணீர் திறந்துவிடாததால் குறுவை சாகுபடி முற்றிலும் பொய்த்து போனது. அதைதொடர்ந்து விவசாயிகள் வடகிழக்கு பருவமழையை நம்பி சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையும் பொய்த்து போனது. இதனால் நாகை மாவட்டத்தில் பெரும்பாலான வயல்களில் பயிர்கள் கருகியதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஆயிரம் செலவு செய்து பயிர்கள் கருகியதால் வாங்கிய கடனை கட்ட முடியாமல் மன வேதனையில் டெல்டா பகுதியில் விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சியில் உயிரிழக்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் சாவு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
விவசாயி சாவுஇந்த நிலையில் நாகை மாவட்டம் வாய்மேடு உடையதேவன்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது68). இவர் அதே பகுதியில் 5 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தார். தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியதால் சுப்பிரமணியன் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை சுப்பிரமணியன் வயலுக்கு சென்றுள்ளார். அங்கு கருகிய பயிர்களை பார்த்து மனமுடைந்த சுப்பிரமணியன் வயலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் வயலுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது சுப்பிரமணியன் வயலில் இறந்து கிடந்துள்ளார். உடனே அவரது உடலை உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு வந்தனர். உயிரிழந்த விவசாயி சுப்பிரமணியனுக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.