டேங்கர் லாரி மீது கன்டெய்னர் லாரி மோதல் 4 ஆயிரம் லிட்டர் டீசல் சாலையில் கொட்டியதால் பரபரப்பு


டேங்கர் லாரி மீது கன்டெய்னர் லாரி மோதல் 4 ஆயிரம் லிட்டர் டீசல் சாலையில் கொட்டியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Dec 2016 4:00 AM IST (Updated: 29 Dec 2016 12:50 AM IST)
t-max-icont-min-icon

மணலி அருகே டேங்கர் லாரி மீது கன்டெய்னர் லாரி மோதியது. இதில் டேங்கரில் ஓட்டை விழுந்ததால் அதில் இருந்த 4 ஆயிரம் லிட்டர் டீசல் சாலையில் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்டெய்னர் லாரி மோதியது எண்ணூர் துறைமுகத்தில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி

திருவொற்றியூர்,

மணலி அருகே டேங்கர் லாரி மீது கன்டெய்னர் லாரி மோதியது. இதில் டேங்கரில் ஓட்டை விழுந்ததால் அதில் இருந்த 4 ஆயிரம் லிட்டர் டீசல் சாலையில் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்டெய்னர் லாரி மோதியது

எண்ணூர் துறைமுகத்தில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று நேற்று காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் நோக்கி பொன்னேரி சாலையில் சென்று கொண்டிருந்தது.

மணலி ஆண்டார்குப்பம் சோதனைச்சாவடி அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கி டேங்கர் லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது ஆண்டார்குப்பம் பகுதியில் இருந்து வந்த கன்டெய்னர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அங்கு நின்றிருந்த டேங்கர் லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.

டீசல் கொட்டியது

இதில் டீசல் டேங்கர் உடைந்து ஓட்டை விழுந்தது. இதனால் டேங்கரில் இருந்த சுமார் 4 ஆயிரம் லிட்டர் டீசல் சாலையில் கொட்டி ஆறாக ஓடியது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மணலியில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து சாலையில் வீணாக கொட்டிக்கிடந்த டீசலை மணல் கொட்டி மூடினர்.

மாதவரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் விரைந்து வந்த போக்குவரத்து போலீசார், போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story