சென்னையில் வங்கி ஊழியர்களை பொம்மை துப்பாக்கியால் மிரட்டி கொள்ளை முயற்சி வாலிபர் கைது
சென்னை வில்லிவாக்கம் அருகே வங்கி ஊழியர்களை பொம்மை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கி முனையில்... சென்னை கொளத்தூர் அருகே ராஜமங்களம் செங்குன்றம்–வில்லிவாக்கம் சாலையில் ஆந்திரா வங்கி உள்ளது. நேற்றும
செங்குன்றம்,
சென்னை வில்லிவாக்கம் அருகே வங்கி ஊழியர்களை பொம்மை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
துப்பாக்கி முனையில்...சென்னை கொளத்தூர் அருகே ராஜமங்களம் செங்குன்றம்–வில்லிவாக்கம் சாலையில் ஆந்திரா வங்கி உள்ளது. நேற்றுமுன்தினம் மாலை வாடிக்கையாளர்களின் சேவை முடிந்த பிறகு 15–க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கணக்குகளை பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு வாலிபர் முகமூடி அணிந்து வங்கிக்குள் நுழைந்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வங்கி ஊழியர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் பயந்து போன ஊழியர்கள் திகைத்து நின்றனர். பணம் எங்கே? என மிரட்டியபடி வங்கி ஊழியர்களை நோக்கி துப்பாக்கியுடன் அவர் சென்றார். இதனால் பதறிப்போன வங்கி ஊழியர்கள் அலறினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து ராஜமங்களம் போலீசில் ஒப்படைத்தனர்.
கைதுபோலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் சென்னை அம்பத்தூரை அடுத்த கள்ளிகுப்பத்தை சேர்ந்த கவுதம் (வயது 23) என்பதும், சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும், அவர் வைத்திருந்தது பொம்மை துப்பாக்கி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து ராஜமங்களம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.