பென்னாகரம் அருகே வனப்பகுதியில் பறவைகளை வேட்டையாடிய 3 பேர் கைது உரிமம்பெறாத துப்பாக்கி பறிமுதல்


பென்னாகரம் அருகே வனப்பகுதியில் பறவைகளை வேட்டையாடிய 3 பேர் கைது உரிமம்பெறாத துப்பாக்கி பறிமுதல்
x
தினத்தந்தி 29 Dec 2016 4:30 AM IST (Updated: 29 Dec 2016 1:04 AM IST)
t-max-icont-min-icon

பென்னாகரம், பென்னாகரம் அருகே வனப்பகுதியில் பறவைகளை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த உரிமம்பெறாத துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. வனத்துறையினர் சோதனை

பென்னாகரம்,

பென்னாகரம் அருகே வனப்பகுதியில் பறவைகளை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த உரிமம்பெறாத துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

வனத்துறையினர் சோதனை

பென்னாகரம் பகுதியில் உள்ள தேவனூர் காப்புக்காடு பகுதியில் மாவட்ட வனஅலுவலர் திருமால் உத்தரவுப்படி வனவர் சுகுமார் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அக்காலத்தான்காடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ஏரியூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்(வயது 28) பிரகாஷ்(24) நெருப்பூரை சேர்ந்த மூர்த்தி(22) என தெரியவந்தது. இந்த 3 பேரும் கொண்டு வந்த பையில், ஒரு குயில், 2 பச்சைக்கிளிகள் மற்றும் 2 கொண்டலாங்குருவிகள் இறந்த நிலையில் இருந்தன.

3 பேர் கைது

இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரித்தபோது இந்த 3 பேரும், வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து உரிமம் இல்லாத துப்பாக்கியை பயன்படுத்தி பறவைகளை வேட்டையாடியது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரும் வந்த மோட்டார் சைக்கிள், உரிமம் பெறாத துப்பாக்கி, மற்றும் வேட்டையாடப்பட்ட பறவைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து சுரேஷ், பிரகாஷ், மூர்த்தி ஆகிய 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story