தாம்பரம் பணிமனையில் மாநகர போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டம்
தாம்பரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ்களை இயக்காமல் அதிகாலையில் மாநகர போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் போராட்டம் சென்னையை அடுத்த தாம்பரத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இங்குள்ள மாநகர போக்குவரத்து கழ
தாம்பரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ்களை இயக்காமல் அதிகாலையில் மாநகர போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்கள் போராட்டம்சென்னையை அடுத்த தாம்பரத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இங்குள்ள மாநகர போக்குவரத்து கழக பஸ்கள் அதிகாலை 4.30 மணி முதல் இயக்கப்படும். காலையில் சுமார் 200–க்கும் மேற்பட்ட பஸ்கள் இந்த பணிமனையில் இருந்து புறப்பட்டு சென்னை புறநகர் பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும்.
இந்தநிலையில் நேற்று காலை மாநகர பஸ்களை இயக்காமல் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பணிமனை வாயிலில் அமர்ந்து திடீரென போராட்டம் நடத்தினர்.
பழுதடைந்த பஸ்கள்போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறும்போது, ‘‘தாம்பரம் பணிமனையில் பழுதடைந்த பஸ்களை இயக்கச் சொல்லி அதிகாரிகள் நிர்ப்பந்தம் செய்கின்றனர். பிரேக் பிடிக்காததால் கடந்த 3 மாதங்களில் 12–க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டு உள்ளன. பஸ்கள் பழுதடைந்தால் பழைய உதிரி பாகங்களால் சரி செய்கின்றனர். இதனால் பல இடங்களில் முக்கிய சாலைகளில் பஸ்கள் பழுதடைந்து நின்று விடுகின்றன. டீசல் பயன்பாடு அதிகமாகிறது. இதை தட்டிக்கேட்டால் அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்து ஊழியர்களை மிரட்டுகின்றனர்’’ என்றனர்.
இதையடுத்து போலீசாரும், போக்குவரத்து கழக அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் காலை 6 மணியளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் அதிகாலையில் பஸ்கள் கிடைக்காமல் பயணிகள் அவதிப்பட்டனர்.
வியாசர்பாடிஇதேபோல் சென்னை வியாசர்பாடி முல்லைநகர் மற்றும் எம்.கே.பி.நகரில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளிலும் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று அதிகாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சுமார் 1 மணிநேரம் தாமதமாக பஸ்கள் இயக்கப்பட்டன.