தர்மபுரி மாவட்ட கோவில்களில் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


தர்மபுரி மாவட்ட கோவில்களில் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 28 Dec 2016 7:37 PM (Updated: 28 Dec 2016 7:37 PM)
t-max-icont-min-icon

தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனுமன் ஜெயந்தி தர்மபுரி மாவட்டத்தில் உ

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அனுமன் ஜெயந்தி

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. பின்னர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு வடை, பொங்கல் உள்பட பல்வேறு வகையான பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி பல கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

வே.முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில்

தர்மபுரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வே.முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த கோவிலில் வழிபாடு நடத்த பெங்களூரு, தர்மபுரி, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து நேற்று ஏராளமான பக்தர்கள் ரெயில் மூலம் வே.முத்தம்பட்டிக்கு வந்தனர். விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

தர்மபுரி எஸ்.வி.ரோடு ஆஞ்சநேயசாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமி வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமியை வழிபட்டனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தர்மபுரி அரிகர நாத சாமி கோவில் தெருவில் உள்ள தாசஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சாமிக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது.

குப்புசெட்டிப்பட்டி

இதே போன்று சோகத்தூர் வீரதீர ஆஞ்சநேயர்சாமி கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொப்பூர் கணவாய் மன்றோ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை நடை பெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்களும், தேசிய நெடுஞ்சாலை வழியாக வாகனங்களில் சென்ற பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி-ஒகேனக்கல் செல்லும் சாலையில் இண்டூர் குப்புசெட்டிப்பட்டியில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமி கோவிலில் அனுமன்ஜெயந்திவிழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி சிறப்பு சொற்பொழிவு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கெரகோட அள்ளி

ஒகேனக்கல் மலைப்பாதையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், கெரகோட அள்ளி ஆஞ்சநேயர் கோவில், காரிமங்கலம் ஏரிக்கரை ஆஞ்சநேயர் கோவில், மணிக்கட்டியூர் ஆஞ்சநேயர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரிஸ்வரர் ஆஞ்சநேயர் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலில் குவியத் தொடங்கினார்கள். காலை முதல் இரவு வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமியை வழிபட்டனர்.

Next Story