குழந்தைகளுக்கு கல்வியை கொடுத்தால் எதிர்காலத்தில் சிறந்து விளங்குவார்கள் போலீஸ் துணை கமிஷனர் சின்னசாமி பேச்சு


குழந்தைகளுக்கு கல்வியை கொடுத்தால் எதிர்காலத்தில் சிறந்து விளங்குவார்கள் போலீஸ் துணை கமிஷனர் சின்னசாமி பேச்சு
x
தினத்தந்தி 29 Dec 2016 4:15 AM IST (Updated: 29 Dec 2016 2:52 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் உள்ள சேவ் தன்னார்வ தொண்டு நிறுவனம் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நடவடிக்கையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 16 மற்றும் 17–வது வார்டுகளை குழந்தை தொழிலாளர் இல்லாத பகுதியாக அறிவிக்கும் நிகழ்ச்சி காங்கேயம் ரோட்டில் உள்ள ஓட்டல

அனுப்பர்பாளையம்,

திருப்பூரில் உள்ள சேவ் தன்னார்வ தொண்டு நிறுவனம் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நடவடிக்கையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 16 மற்றும் 17–வது வார்டுகளை குழந்தை தொழிலாளர் இல்லாத பகுதியாக அறிவிக்கும் நிகழ்ச்சி காங்கேயம் ரோட்டில் உள்ள ஓட்டலில் நடைபெற்றது. இதில் சேவ் நிர்வாக இயக்குனர் அலோசியஸ் தலைமை தாங்கி, வரவேற்று பேசினார். திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சின்னசாமி கலந்து கொண்டு பேசுகையில் ‘‘குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி மிகவும் அவசியம். குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுத்தால் எதிர்காலத்தில் அவர்கள் விஞ்ஞானிகளாகவும், தொழில் முனைவோராகவும் சிறந்து விளங்குவார்கள். உலக அளவில் வர்த்தகத்தை கொண்டுள்ள திருப்பூரில் தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நடவடிக்கை நல்ல தொடக்கம் ஆகும்’’ என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியையொட்டி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த செயல்விளக்கம், குழு கலந்துரையாடல் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பணியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் தொகுதி எம்.பி. உதயகுமார், திருப்பூர் டீமா சங்க தலைவர் முத்துரத்தினம், ஈஸ்ட்மேன் சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.



Next Story