மொத்தமாக ஆயிரம் பேருக்கு டிக்கெட் முன்பதிவு கேட்ட விவசாயிகள் ரெயில்வே அதிகாரிகள் கொடுக்க மறுப்பு

திருச்சி,
டெல்லியில் மார்ச் மாதம் நடைபெறும் போராட்டத்திற்கு திருச்சியில் இருந்து ரெயிலில் பயணம் செய்ய மொத்தமாக ஆயிரம் பேருக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய விவசாயிகள் கேட்டதற்கு ரெயில்வே அதிகாரிகள் கொடுக்க மறுத்தனர்.
டெல்லியில் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் டெல்லியில் வருகிற மார்ச் மாதம் போராட்டம் நடைபெற உள்ளது. போராட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சியில் இருந்து ரெயிலில் புறப்பட்டு செல்ல விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் டெல்லி செல்ல ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பலர் நேற்று காலை திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தனர்.
ரெயில் டிக்கெட் முன்பதிவு
முன்பதிவு மையத்தில் டிக்கெட் கவுண்ட்டரில் ரெயில்வே ஊழியர்களிடம் ஆயிரம் பேருக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என அய்யாக்கண்ணு கேட்டார். அதற்கு மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்வதில் சில விதிமுறைகள் உள்ளது. 30 பேருக்கு மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என ஊழியர்களும், முன்பதிவு மைய அதிகாரிகளும் கூறினர். மேலும் அதற்கு மேல் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமானால் முதுநிலை வணிக மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் என்றனர்.
மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்தால் விவசாயிகள் அனைவரும் ரெயில்வே மேலாளர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துவோம் என அய்யாக்கண்ணு தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் கண்டோன்மெண்ட் போலீசார், ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்தனர். அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு ரெயில்வே விதிமுறைப்படி 30 பேருக்கு தற்போது டிக்கெட் வாங்கி கொள்ள அறிவுறுத்தினர். இதையடுத்து டெல்லி செல்ல 30 பேருக்கு டிக்கெட் முன்பதிவு செய்தனர்.
அதிகாரிகள் மறுப்பு
அதன்பின் திருச்சி கோட்ட ரெயில்வே வணிக மேலாளர் ஜார்ஜை அவரது அலுவலகத்தில் சந்தித்து விவசாயிகள் மொத்தமாக ஆயிரம் பேர் டெல்லி செல்ல டிக்கெட் முன்பதிவு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். அதற்கு ஆயிரம் பேருக்கு முன்பதிவு செய்ய முடியாது, இருக்கைகள் காலியை பொறுத்து தான் குறிப்பிட்ட அளவு தான் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும். அதற்கு உரிய ஏற்பாடு செய்வதாகவும், தேவையெனில் சிறப்பு பெட்டிகளை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம். அதற்கு தனிக்கட்டணம் என ஜார்ஜ் கூறினார்.
இதையடுத்து 300 பேருக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய கோரிக்கை விடுத்தனர். அதற்கு விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன்பின் அனைவரும் புறப்பட்டு சென்றனர்.
100 நாட்கள் போராட்டம்
அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறுகையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் ஜந்தர்மந்தர் மைதானத்தில் வருகிற மார்ச் மாதம் போராட்டம் நடத்த உள்ளோம். இதற்காக மார்ச் மாதம் 12-ந்தேதி திருச்சியில் இருந்து ரெயிலில் புறப்பட்டு செல்கிறோம். அங்கு தொடர்ந்து 100 நாட்கள் போராட்டம் நடத்தப்படும். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை அங்கேயே இருந்து போராட்டம் நடத்துவோம், இல்லையெனில் மரணமடைவோம்”என்றனர்.

Next Story