உச்சநீதிமன்ற உத்தரவுபடி வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் தீர்மானம்
அரியலூரில் மாற்றுத்திறனாளிகள் மாநாடு நேற்று நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம். தாமரைக்குளம், உச்சநீதிமன்ற உத்தரவுபடி வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரிய
அரியலூரில் மாற்றுத்திறனாளிகள் மாநாடு நேற்று நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
தாமரைக்குளம்,
உச்சநீதிமன்ற உத்தரவுபடி வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரியலூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டமைப்பு மாநாடு
அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாநில மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மாநாடு அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் பழனியாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கொளஞ்சிநாதன், மாவட்ட துணைச்செயலாளர் சட்டத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில தலைவர் சிம்மச்சந்திரன், மாநில செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். மாநாட்டில், அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ஆறுமுகம், மாவட்ட ஆலோசகர் கோவிந்தராஜ் பிள்ளை மற்றும் மகளிர் அணியினர், செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நடைபெற்ற ஊர்வலத்தை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இம்தியாஸ் அகமது தொடங்கி வைத்தார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு, மாநாடு நடைபெற்ற இடத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.
இடஒதுக்கீடு
மாநாட்டில், மாற்றுத்திறனாளிகளின் நிலையை அறிய, தமிழக அரசு உடனடியாக மாநில ஒருங்கிணைப்பு குழுவை அமைக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு உச்சநீதிமன்ற உத்தரவுபடி அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் அமைக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற நிபந்தனைகளை தளர்த்தி 40 சதவீதத்திலிருந்து அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

Next Story