மும்பை புறநகர் ரெயில் நிலையங்களில் மேலும் 18 நகரும் படிக்கட்டுகள் மத்திய ரெயில்வே முடிவு


மும்பை புறநகர் ரெயில் நிலையங்களில் மேலும் 18 நகரும் படிக்கட்டுகள் மத்திய ரெயில்வே முடிவு
x
தினத்தந்தி 29 Dec 2016 4:09 AM IST (Updated: 29 Dec 2016 4:09 AM IST)
t-max-icont-min-icon

மும்பை புறநகர் ரெயில் நிலையங்களில் மேலும் 18 நகரும் படிக்கட்டுகள் அமைக்க மத்திய ரெயில்வே முடிவு செய்து உள்ளது. புறநகர் ரெயில் நிலையங்கள் மத்திய ரெயில்வே சார்பில் மெயின், துறைமுகம், டிரான்ஸ்ஹார்பர் வழித்தடங்களில் புறநகர் மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட

மும்பை,

மும்பை புறநகர் ரெயில் நிலையங்களில் மேலும் 18 நகரும் படிக்கட்டுகள் அமைக்க மத்திய ரெயில்வே முடிவு செய்து உள்ளது.

புறநகர் ரெயில் நிலையங்கள்

மத்திய ரெயில்வே சார்பில் மெயின், துறைமுகம், டிரான்ஸ்ஹார்பர் வழித்தடங்களில் புறநகர் மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவைகளை தினசரி 42 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

புறநகர் ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் வசதிக்காக நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது தாதர், வித்யாவிகார், விக்ரோலி, முல்லுண்டு, தானே ஆகிய ரெயில் நிலையங்களில் பிளாட்பாரத்தையும், நடைபாதை மேம்பாலத்தையும் இணைக்கும் வகையில் நகரும் படிக்கட்டுகள் உள்ளன.

நகரும் படிக்கட்டுகள்

இந்த நிலையில், புறநகர் ரெயில் நிலையங்களில் மேலும் 18 நகரும் படிக்கட்டுகளை அமைக்க மத்திய ரெயில்வே முடிவு செய்து உள்ளது. இதில் குறிப்பாக தாதர் மற்றும் தானே ரெயில் நிலையங்களில் தலா 4, காட்கோபர், கல்யாண் ஆகிய ரெயில் நிலையங்களில் தலா 2 நகரும் படிக்கட்டுகள் உள்பட மேலும் சில ரெயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகளை அமைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இதுமட்டுமின்றி தாதர், டோம்விலி, காட்கோபர், தானே, குர்லா டெர்மினஸ் ரெயில் நிலையங்களில் 16 லிப்டுகள் அமைக்கவும் மத்திய ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.


Next Story