அட்வகேட் ஜெனரலாக ரோகித் தியோ நியமனம் மந்திரிசபை முடிவுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல்
மராட்டிய அரசின் அட்வகேட் ஜெனரலாக இருந்த ஸ்ரீஹரி அனே, விதர்பா மற்றும் மரத்வாடா தனி மாநில விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக கடந்த மார்ச் மாதம் பதவி விலகினார். இதைத்தொடர்ந்து, ரோகித் தியோ இடைக்கால அட்வகேட் ஜெனரலாக பொறுப்பு ஏற்றார். இந்தநிலை
மும்பை
மராட்டிய அரசின் அட்வகேட் ஜெனரலாக இருந்த ஸ்ரீஹரி அனே, விதர்பா மற்றும் மரத்வாடா தனி மாநில விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக கடந்த மார்ச் மாதம் பதவி விலகினார். இதைத்தொடர்ந்து, ரோகித் தியோ இடைக்கால அட்வகேட் ஜெனரலாக பொறுப்பு ஏற்றார்.
இந்தநிலையில், ரோகித் தியோ வகிக்கும் பொறுப்பு அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணானது என்று கூறி மும்பை ஐகோர்ட்டில் காங்கிரஸ் எம்.எல்.சி. சஞ்சய் தத் மனு தொடர்ந்தார். இதனை விசாரித்த ஐகோர்ட்டு, புதிய அட்வகேட் ஜெனரலை நியமிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து, முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் மும்பையில் மந்திரிசபை கூடி இடைக்கால அட்வகேட் ஜெனரல் ரோகித் தியோவை புதிய அட்வகேட் ஜெனரலாக நியமிக்க முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியது.
மந்திரிசபையின் முடிவுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று ஒப்புதல் அளித்தார்.