‘புனே மெட்ரோ ரெயில் திட்ட பணியை துரிதப்படுத்துங்கள்’ தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவு
முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று மும்பையில் புனே பெருநகர மேம்பாட்டு கழக அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது புனேயின் 2–ம் கட்ட ஹிஞ்சேவாடி– சிவாஜி நகர் மெட்ரோ ரெயில் திட்ட பணியை துரிதப்படுத்துமாறு அவர் உத்தரவிட்டார். இது தொடர்பாக முதல்–மந்திரி அ
மும்பை,
முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று மும்பையில் புனே பெருநகர மேம்பாட்டு கழக அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது புனேயின் 2–ம் கட்ட ஹிஞ்சேவாடி– சிவாஜி நகர் மெட்ரோ ரெயில் திட்ட பணியை துரிதப்படுத்துமாறு அவர் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக முதல்–மந்திரி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘புனேயில் 23 ரெயில் நிலையங்களை உள்ளடக்கிய 23.33 கிலோமீட்டர் தூர மெட்ரோ ரெயில் திட்ட பணிக்கு புனே பெருநகர மேம்பாட்டு கழகம் ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்துக்கு மொத்தம் ரூ.7 ஆயிரத்து 947 கோடி செலவிடப்படுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.
Next Story