புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலத்த மழை புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சாலையோர கடைகளில் இளநீர், கரும்புச்சாறு போன்றவை மீண்டும் விற்பனைக்கு வந்தது. இந்நி
புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பலத்த மழை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சாலையோர கடைகளில் இளநீர், கரும்புச்சாறு போன்றவை மீண்டும் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில் நேற்று காலையில் புதுக்கோட்டை, மழையூர் பகுதியில் வானம் இருண்ட நிலையில் காணப்பட்டது. அதனை தொடர்ந்து திடீரென பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் புதுக்கோட்டையில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கறம்பக்குடி
கறம்பக்குடி பகுதி வானம் பார்த்த பூமியாகும். கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதியில் பருவ மழை சரியாக பெய்யாததால் இத்தாலுகா பகுதியில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் தண்ணீர் இன்றி வறண்டன. விவசாயம் பொய்த்து போனதால் வருமானம் இன்றி விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர். நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்ததால் குடிநீருக்கு தட்டுபாடு ஏற்படும் நிலை உருவானது. இந்நிலையில் கறம்பக்குடி பகுதியில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கு எடுத்து ஓடியது. நீண்ட காலத்திற்கு பிறகு மழை பெய்ததால் இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். நெல், கடலை, கரும்பு சாகுபடி செய்திருந்த விவசாயிகளும் திடீரென பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.
மழையளவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
அறந்தாங்கி-4, ஆயிங்குடி-5, நாகுடி-5, கட்டுமாவடி-2, மணமேல்குடி-2,அன்னவாசல்-9, இலுப்பூர்-1, குடுமியான்மலை-13, பொன்னமராவதி-9, கறம்பக்குடி-19, காரையூர்-16, மழையூர்-25, புதுக்கோட்டை-17, பெருங்களுர்-21, ஆதனக்கோட்டை-17, கந்தர்வகோட்டை-13, கீரனூர்-9, உடையாளிப்பட்டி-8, திருமயம்-2, அரிமளம்-5, ஆலங்குடி-10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

Next Story