ஊராட்சி நிர்வாக சிறப்பு அதிகாரி மீது முறைகேடு புகார் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு
ஊராட்சி நிர்வாக சிறப்பு அதிகாரி மீது முறைகேடு புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நிதி முறைகேடு திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவர் ராமச்சந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்க
மதுரை,
ஊராட்சி நிர்வாக சிறப்பு அதிகாரி மீது முறைகேடு புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நிதி முறைகேடுதிண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவர் ராமச்சந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகத்தினரின் பதவிக்காலம் முடிவடைந்ததால், ஊராட்சி நிர்வாகங்கள் சிறப்பு அதிகாரிகளின் கீழ் நடந்து வருகிறது. அந்த அதிகாரிகள் பொறுப்பேற்றதற்கு பின்னர், திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டி, எதிலோடு, குல்லலக்குண்டு, பஞ்சமலையான்கோட்டை உள்பட ஏராளமான ஊராட்சிகளின் நிர்வாகத்தில் நிதி முறைகேடுகள் நடந்துள்ளன.
நடவடிக்கைஎனவே சம்பந்தப்பட்ட சிறப்பு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர், திண்டுக்கல் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோர்ட்டு தலையிட்டு சிறப்பு அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
பின்னர் மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் ஒரு மாதத்துக்குள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.