திருமங்கலம் நகரில் குடிநீர் வீணாகி வரும் அவலம்
திருமங்கலம் நகரில் வைகை, காவிரி குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் நகரில் உள்ள 27 வார்டுகளிலும் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு, மோட்டார் மூலம் சின்டெக்ஸ் தொட்டியில் ஏற்றி, பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தநிலையில் சில இடங்களில் குழாய்க
திருமங்கலம்,
திருமங்கலம் நகரில் வைகை, காவிரி குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் நகரில் உள்ள 27 வார்டுகளிலும் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு, மோட்டார் மூலம் சின்டெக்ஸ் தொட்டியில் ஏற்றி, பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தநிலையில் சில இடங்களில் குழாய்களில் சரியான பராமரிப்பு இல்லாததால், குழாய் உடைந்து, தண்ணீர் வீணாகி வெளியே செல்கிறது. மேலும் போதிய மழை இல்லாததால் ஆறு, ஊருணிகள், கண்மாய்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. எனவே தற்போது உள்ள தண்ணீரையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அதற்கு குழாய்கள் பழுது இல்லாமல் இருக்க வேண்டும். ஆகவே நகராட்சி அதிகாரிகள் நகரில் உடைந்த குழாய்களை சரி செய்து தண்ணீர் வீணாகி வருதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.
Next Story