மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் தள்ளு முள்ளு; 150 பேர் கைது
மதுரை, டிச.29– மதுரை கலெக்டர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்திய 150 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது. போராட்டம் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்ககோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில
மதுரை,
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்திய 150 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
போராட்டம்
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்ககோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள்சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி மதுரை மாவட்ட கலெக்டர்அலுவலகம் முன்பாக நேற்று காலை விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினர். அதில் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கவேண்டும். தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்திற்கு தலா ரூ.10லட்சம் வழங்கி, அரசு பணி வழங்க வேண்டும் என்பது போன்ற கோஷங்களை எழுப்பினர். அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அலுவலக கதவுகள் மூடப்பட்டன. இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றனர். அதனால் போலீசார் அவர்களை தடுத்தனர்.தள்ளு முள்ளு
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு உண்டானது. அதை தொடர்ந்து 150 பேர்களை போலீசார் கைது செய்து வேன்களில் அழைத்துச் சென்றனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Next Story