உடலுக்கு ஏற்ற ஊதா ரொட்டி


உடலுக்கு ஏற்ற ஊதா ரொட்டி
x
தினத்தந்தி 30 Dec 2016 2:30 AM IST (Updated: 29 Dec 2016 3:41 PM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பூரைச் சேர்ந்தவர், ஸோவ் வெய்பியாவோ. இவர் ஒரு உணவு விஞ்ஞானி.

சிங்கப்பூரைச் சேர்ந்தவர், ஸோவ் வெய்பியாவோ. இவர் ஒரு உணவு விஞ்ஞானி. விதவிதமான உணவு வகைகளை புதிதாக சமைப்பதுடன், உடல் ஆரோக்கியத்தை மேம்    படுத்தும் உணவு வகைகள் தொடர்பான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். இவரது ஆராய்ச்சி, ஊதா நிற  ரொட்டிகளை உருவாக்கி இருக்கிறது. திராட்சை, ப்ளூபெரி, ஸ்டார்ச் நீக்கப்பட்ட கருப்பு அரிசிகளைப் பயன்படுத்தி, உருவாக்கப்படும் இந்த ஊதா ரொட்டிகள், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. ஊதா ரொட்டிகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக்கொள்வதால், கலோரிகள் உடல் இயக்கத்திற்கான சக்தியாக மாறிவிடுகிறது. இதனால் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகளுக்கு தீர்வாக அமை வதுடன், புற்றுநோய் பாதிப்பிலிருந்தும் காப்பாற்றுகிறது. இதுவரை ஆராய்ச்சி நிலையில் இருந்த ஊதா ரொட்டிகள், தற்போது இந்தியாவிலும் விற்பனைக்கு வந்துவிட்டன.

Next Story