‘பாம்பு’ கம்பளிப்பூச்சி
கம்பளிப் பூச்சிகளில் ஒரு வகை, டைனாஸ்டர் டாரியஸ். இவை மிகவும் புத்திசாலிகள்.
கம்பளிப் பூச்சிகளில் ஒரு வகை, Ôடைனாஸ்டர் டாரியஸ்Õ. இவை மிகவும் புத்திசாலிகள். எதிரிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக கூட்டுப்புழு பருவத்தில் தங்கள் கூட்டை, பாம்பின் உருவத்தைப் போல மாற்றிக்கொள்கின்றன. கூட்டுப்புழுப் பருவத்தில் அவற்றால் சண்டையிடவோ, தப்பிக்கவோ முடியாது. இந்தப் பருவத்தில்தான் கம்பளிப் பூச்சி, வண்ணத்துப்பூச்சியாக மாற்றம் அடையும்.
தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக இந்த யுக்தியை இவை கையாளுகின்றன. எதிரிகள் அருகில் வந்தால், கூட்டைச் சற்றுச் சுருக்கி, விரிக்கும். இதனால் பாம்புதான் நகர்கிறது என்று பயந்து எதிரிகள் ஓடி விடுகின்றன. கூட்டின் முன்பாதி மட்டும் பாம்பு போலவும் பின்பாதி கூடுபோலவும் அமைந்திருக்கின்றன. முழு வளர்ச்சியடைந்ததும் இந்தக் கூடுகளில் இருந்து வண்ணத்துப்பூச்சிகள் பறந்து சென்றுவிடுகின்றன.

Next Story