பியர் யோகா
இந்தியாவின் பாரம்பரிய கலையான யோகாசனம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இத்தாலி போன்ற உலக நாடுகளில் பியர் யோகாவாக மாறியிருக்கிறது.
இந்தியாவின் பாரம்பரிய கலையான யோகாசனம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இத்தாலி போன்ற உலக நாடுகளில் பியர் யோகாவாக மாறியிருக்கிறது. வழக்கமான யோகா கலைதான் என்றாலும், அதில் பியர் பானத்தை நுழைத்து புதுமையாக உடலை வளைத்து நெளிக்கிறார்கள். பியர் பாட்டிலை கையில் வைத்தபடியும், பியர் நிரம்பி வழியும் கோப்பைகளை தலையில் சுமந்தபடியும் யோகா சனம் செய்து அசத்துகிறார்கள். இதுவரை பொழுதுபோக்காக இருந்த பியர் யோகா, அடுத்த ஆண்டு முதல் உலக அளவிலான போட்டியாக மாற இருக்கிறது. இதனால் பியர் யோகா பிரியர்கள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
Next Story