உடலில் தீவைத்துக்கொண்ட ஆட்டோ டிரைவர் சாவு


உடலில் தீவைத்துக்கொண்ட  ஆட்டோ டிரைவர் சாவு
x
தினத்தந்தி 30 Dec 2016 4:15 AM IST (Updated: 29 Dec 2016 6:43 PM IST)
t-max-icont-min-icon

மண்டபம் யூனியன் பனைக்குளம் நூர்முகமது கம்பம் பகுதியில் வசித்து வந்தவர் சாகுல்ஹமீது, ஆட்டோ டிரைவர். இவருக்கும் இவரது மனைவி காதர்சுல்தானாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய மனைவி ஏர்வாடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று

பனைக்குளம்,

மண்டபம் யூனியன் பனைக்குளம் நூர்முகமது கம்பம் பகுதியில் வசித்து வந்தவர் சாகுல்ஹமீது, ஆட்டோ டிரைவர். இவருக்கும் இவரது மனைவி காதர்சுல்தானாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய மனைவி ஏர்வாடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டாராம். இதையடுத்து மனமுடைந்து காணப்பட்ட சாகுல்ஹமீது உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு த.மு.மு.க. ஆம்புலன்சு மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சாகுல்ஹமீது பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேவிபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இறந்த ஆட்டோ டிரைவர் சாகுல்ஹமீது அ.தி.மு.க. தொண்டராவார். அவரது இறுதி சடங்கில் அ.தி.மு.க. நிர்வாகிகள், மற்றும் ஜமாத் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.


Next Story