கடலில் தத்தளித்த புள்ளிமான் மீட்பு
கடலில் தத்தளித்த புள்ளிமானை மீனவர்கள் மீட்டனர். புள்ளிமான் பெரியபட்டணம் அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது புள்ளிமான் ஒன்று கடலில் தத்தளித்தபடியே உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இதைக்கண்ட மீனவர்கள் உடனே கடல
பனைக்குளம்,
கடலில் தத்தளித்த புள்ளிமானை மீனவர்கள் மீட்டனர்.
புள்ளிமான்
பெரியபட்டணம் அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது புள்ளிமான் ஒன்று கடலில் தத்தளித்தபடியே உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.
இதைக்கண்ட மீனவர்கள் உடனே கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் சரவணன், சதாம் உசேன் ஆகியோர் மீனவர்கள் உதவியுடன் கடலுக்குள் சென்று உயிருக்கு போராடிய அந்த புள்ளிமானை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
விசாரணை
மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்திரா நகர் பகுதியில் மீட்கப்பட்ட புள்ளிமானை குழந்தைகளும், பொதுமக்களும் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். புள்ளிமான் எப்படி கடலுக்குள் சென்று என்பது குறித்து வனத்துறையினரும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.