மிளகாய் தோட்டத்தில் ஆடுமேய்ந்த தகராறு: இருதரப்பினர் இடையே மோதல்; 3 பேர் கைது


மிளகாய் தோட்டத்தில் ஆடுமேய்ந்த தகராறு: இருதரப்பினர் இடையே மோதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 30 Dec 2016 4:15 AM IST (Updated: 29 Dec 2016 6:46 PM IST)
t-max-icont-min-icon

மிளகாய் தோட்டத்தில் ஆடுமேய்ந்த தகராறில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். தகராறு ராமநாதபுரத்தை அடுத்துள்ள உத்தரகோசமங்கை அருகே உள்ளது ஆலங்குளம். இந்த ஊரைச்சேர்ந்த கனிகுமார் என்பவருடைய மனைவி தங்கம் (வயது

ராமநாதபுரம்,

மிளகாய் தோட்டத்தில் ஆடுமேய்ந்த தகராறில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.

தகராறு

ராமநாதபுரத்தை அடுத்துள்ள உத்தரகோசமங்கை அருகே உள்ளது ஆலங்குளம். இந்த ஊரைச்சேர்ந்த கனிகுமார் என்பவருடைய மனைவி தங்கம் (வயது 30). இவருடைய மிளகாய் தோட்டத்தில் அதேபகுதியை சேர்ந்த மாரிமுத்து மனைவி கர்ணபூபதியின் ஆடுகள் மேய்ந்ததாம்.

இதுதொடர்பாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த தகராறு காரணமாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் உருட்டுக்கட்டையால் தாக்கிக்கொண்டனர். இதில் தங்கம் மற்றும் கர்ணபூபதி ஆகியோர் படுகாயம் அடைந்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

புகார்

இதுகுறித்து இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் உத்தரகோசமங்கை போலீசில் புகார் செய்தனர். போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து தங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் சந்திரன் என்பவரையும், கர்ணபூபதி அளித்த புகாரின் அடிப்படையில் முருகன், கனிகுமார் ஆகியோரையும் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.


Next Story