மோட்டார் சைக்கிள்கள் மோதல்: காயமடைந்த பாலிடெக்னிக் மாணவர் சிகிச்சை பலனின்றி சாவு
நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள மேலச்செவல் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ராஜகுமார் மகன் ஜெயக்குமார் (வயது 17). இவர் தருவை பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 25–ந் தேதி ஜெயக்குமார் மோட்டார் சைக்கிளில் அம்பை ரோட்
நெல்லை,
நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள மேலச்செவல் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ராஜகுமார் மகன் ஜெயக்குமார் (வயது 17). இவர் தருவை பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 25–ந் தேதி ஜெயக்குமார் மோட்டார் சைக்கிளில் அம்பை ரோட்டில் சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை ஜெயக்குமார் முந்திச் செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. இந்த சமயத்தில் 3 மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இதில் 3 மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் ஜெயக்குமார் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.