கோவில்பட்டியில் ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் பருவமழை பொய்த்ததால், தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், மழையின்றி கருகிய அனைத்து பயிர்களுக
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்பருவமழை பொய்த்ததால், தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், மழையின்றி கருகிய அனைத்து பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, ம.தி.மு.க. சார்பில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று காலையில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி துணை செயலாளர்கள் சிவகுமார், சிவஞானவேல், வரதன், தமிழக விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் மாரிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ், மாநில விவசாய அணி செயலாளர் ஆடுதுறை முருகன் ஆகியோர் பேசினர்.
கருகிய பயிர்களுடன்...நகர செயலாளர் பால்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் பவுன் மாரியப்பன், அழகர்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தெய்வேந்திரன், கணேசன், கொம்பையா, எரிமலை வரதன், நகர கூட்டுறவு வங்கி துணை தலைவர் சரவணன், மாநில நிர்வாகிகள் பொன் ஸ்ரீராம், மலைராஜ், இளைஞர் அணி நகர செயலாளர் லவராஜா, நகர துணை செயலாளர் வனராஜன், வையாபுரி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.